Followers

CJ7 – Alien நாய்குட்டி படம்.

Posted by மு.இரா Saturday, September 5, 2009

image

நம்மை எல்லாம் சிரிக்க வைக்கும் சர்க்கஸ் குள்ளர்களை பார்த்தால், எப்போதும் சிரிச்சுகிட்டே இருக்காங்களேனு தோணும்… ஆனால் அவர்கள் வாழ்க்கையில் ரொம்பவும் கஷ்டபட்டிருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையே போராட்டம் நிறைந்ததாக இருக்கும். அது போலதான் இந்த CJ7 படமும், படம் முழுக்க சிரிப்பாக சென்றாலும், அதனூடையே வாழ்க்கை சோகமும் வரும்.

ஒரு ஏழை தந்தை மற்றும் மகனுடைய கதை இது. தந்தையாக Chow Ti (Stephen Chow), அவரது மகனாக Dicky (Xu Jiao). படத்தின் ஆரம்பத்தில் அழுக்கான ஷீவுடன் ஒரு சின்ன பையன், ஒரு பெரிய தனியார் பள்ளிக்கு செல்கிறான். வகுப்பில் ஆசிரியர் பிற்காலத்தில் நீங்க என்ன ஆக ஆசை படுகிறீர்கள்னு கேப்பாரு. ”நான் ஏழையா இருக்க ஆசைபடுறேனு அந்த அழுக்கு ஷீ பையன் சொல்லுவான். ஏழையா இருந்தால்தான் தப்பு எதுவும் செய்ய மாட்டேன், யார் கூடயும் சண்டைக்கு போக மாட்டேன், நல்லா படிச்சு பெரிய ஆளாவேன். அப்ப நான் ஏழையா இருந்தாலும், மத்தவங்க என்ன மதிப்பாங்க….”

அந்த பக்கம் Stephen Chow கட்டிட தொழிலாளியா வேலை பார்ப்பார். அவரை காட்டும் போது போடும் பின்னணி இசைக்கு உணர்ச்சிவச படாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவர்கள் இருவரின் வாழ்க்கை இப்படியே போக, இவர்களுக்கு கிடைக்கும் Alien நாய்குட்டிதான் மிச்ச கதை.

image

இந்த Alien நாய்குட்டியுடன் ஷீரோ பையன் செய்யும் காமெடிதான் மீதி படம். முடிவில் Stephen Chow விபத்துக்குள்ளாகிறார். அவரை அந்த Alien நாய்குட்டி தன் உயிரை கொடுத்து காப்பாற்றுகிறது.

image இப்படத்தின் முன்னோட்டம்:

 

இப்படத்தை இலவச பதிவிறக்கம் (Download)  செய்ய….

Torrent-ல் பதிவிறக்கம் செய்ய…. இணைப்பு

Torrent-ல் பதிவிறக்கம் செய்வது எப்படி?

தெரிய இங்கே சொடுக்கவும்

குறிப்பு: முதல் பதிவு என்பதால், சரியாக விவரிக்க இயலவில்லை. பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், பின்னூட்டத்தில் தெரிய படுத்தவும்.

2 comments

  1. Jackiesekar Says:
  2. வாழ்த்துக்கள் நண்பரே... குழந்தைகளுக்கான மென்மையான படங்களை இந்த தளத்தில் இருந்து எதிர்பார்க்கின்றேன். பிரியங்களுடன் ஜாக்கி தொடர்ந்து நல்ல படங்களை கொடுங்கள்

     
  3. நன்றி, என்னை போண்ற சிறியோரை பாரட்டியதற்கு நன்றி. ”உங்களை போல் ஒருவன்” நான்....

     

Post a Comment