Followers

image எல்லாரோட வாழ்க்கைக்கும் முக்கியமான தேவை ஒரு வாழ்க்கைதுணை அதாவது மனைவி. நல்லா காதலிச்சிட்டு, இல்ல மனைவியோட இருந்துட்டு, ஒரு சமயத்துல பிரியனும்னு வரும்போது யாராலுமே, தாங்க முடியாது. இந்த படத்துல ஷீரோ Carl Allen (Jim Carrey)யும், தன் மனைவி தன்ன விவாகரத்து பண்ணிட்டதால வரும் சோகத்தோடு கதை ஆரம்பிக்குது.

வாழ்க்கை எப்பவுமே சந்தோஷமா இருக்கறதுல்ல, நாம எப்படி வாழறமோ, அத பொருத்துதான் சந்தோஷமும், இருக்கும். இத்தான் இந்த படத்துல சொல்ல வர கருத்து.

image

பொண்டாட்டி விட்டுட்டு, போய்ட்டதால Feel பண்ணிகிட்டு, நண்பர்களை எல்லாம் உதரும் Jim Careey. அதனால எக்கசக்கமா நண்பர்கள் கிட்ட திட்டு வாங்குறாரு… நண்பர்கள் வற்புறுத்தல்லால, நம்ம ஊரு சாமியார் போல, Advice சொல்லற ஒரு Programme-கு போறாரு. அங்க உள்ள குரு, ஜிம் கேரி கூட ஒரு பெட் கட்டுராங்க…

அதாவது, இந்த Programme முடிஞ்சு போன பிறகு, யார் என்ன கேட்டாலும் YES-னு சொல்லனும். "Yes!" to every opportunity…. புரியுதாங்க..? மீட்டிங் முடிச்ச பிறகு, ஒரு பிச்சைகாரன் வந்து,  ஜிம் கேரிகிட்ட கேப்பான். “என்ன கொஞ்சம் அந்த மலை உச்சி வரைக்கும் டிராப் பண்ண முடியுமானு?” இதுல இருந்து படம் சூடு பிடிக்க ஆரம்பிக்கும். ஜிம் கேரி அந்த பிச்சைகாரன்ன… டிராப் பண்ணறதால, என்ன? என்ன? அவரோட வாழ்க்கையில நடக்குது.

அவரோட வாழ்க்கையில, வர ஒவ்வொரு வாய்ப்பையும், பயன்படுத்தறதால அவரோட வாழ்க்கை எப்படி மாறுதுனு படம் அழகா போகுது, நம்ம வாழ்க்கையில், ஒவ்வொரு சின்ன விஷயத்தையும், தட்டி கழிக்காம, இது போல இருந்தமனா நம்மளும் YES MAN தான்….

image

பின் குறிப்பு:

ஜிம் கேரி பட வரிசையில, பயங்கர ஷிட் கொடுத்த படம் இது. செலவு மட்டும் 70 மில்லியன் டாலர், ஆனா உலகம் Fulla Collection 220 மில்லியன் டாலர்!!

இப்படத்தின் முன்னோட்டம்:

இந்த படம் பாக்கனுமா?  Download செய்யுங்க…

Free Download: Torrent-ல…. இணைப்பு.

Torrent-ல Download செய்ய தெரியலயா?

Torrent-ல் Download செய்வது எப்படி? இங்கே சொடுக்கவும்.

கடைசி குறிப்பு:

படம் பார்த்து, மகிழ்ச்சியா இருங்க… அப்படியே… உங்க கருத்துக்களையும், கொஞ்சம் சொல்லிட்டு போங்க…. நன்றி, வணக்கம்.

CJ7 – Alien நாய்குட்டி படம்.

Posted by மு.இரா Saturday, September 5, 2009 2 comments

image

நம்மை எல்லாம் சிரிக்க வைக்கும் சர்க்கஸ் குள்ளர்களை பார்த்தால், எப்போதும் சிரிச்சுகிட்டே இருக்காங்களேனு தோணும்… ஆனால் அவர்கள் வாழ்க்கையில் ரொம்பவும் கஷ்டபட்டிருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையே போராட்டம் நிறைந்ததாக இருக்கும். அது போலதான் இந்த CJ7 படமும், படம் முழுக்க சிரிப்பாக சென்றாலும், அதனூடையே வாழ்க்கை சோகமும் வரும்.

ஒரு ஏழை தந்தை மற்றும் மகனுடைய கதை இது. தந்தையாக Chow Ti (Stephen Chow), அவரது மகனாக Dicky (Xu Jiao). படத்தின் ஆரம்பத்தில் அழுக்கான ஷீவுடன் ஒரு சின்ன பையன், ஒரு பெரிய தனியார் பள்ளிக்கு செல்கிறான். வகுப்பில் ஆசிரியர் பிற்காலத்தில் நீங்க என்ன ஆக ஆசை படுகிறீர்கள்னு கேப்பாரு. ”நான் ஏழையா இருக்க ஆசைபடுறேனு அந்த அழுக்கு ஷீ பையன் சொல்லுவான். ஏழையா இருந்தால்தான் தப்பு எதுவும் செய்ய மாட்டேன், யார் கூடயும் சண்டைக்கு போக மாட்டேன், நல்லா படிச்சு பெரிய ஆளாவேன். அப்ப நான் ஏழையா இருந்தாலும், மத்தவங்க என்ன மதிப்பாங்க….”

அந்த பக்கம் Stephen Chow கட்டிட தொழிலாளியா வேலை பார்ப்பார். அவரை காட்டும் போது போடும் பின்னணி இசைக்கு உணர்ச்சிவச படாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவர்கள் இருவரின் வாழ்க்கை இப்படியே போக, இவர்களுக்கு கிடைக்கும் Alien நாய்குட்டிதான் மிச்ச கதை.

image

இந்த Alien நாய்குட்டியுடன் ஷீரோ பையன் செய்யும் காமெடிதான் மீதி படம். முடிவில் Stephen Chow விபத்துக்குள்ளாகிறார். அவரை அந்த Alien நாய்குட்டி தன் உயிரை கொடுத்து காப்பாற்றுகிறது.

image இப்படத்தின் முன்னோட்டம்:

 

இப்படத்தை இலவச பதிவிறக்கம் (Download)  செய்ய….

Torrent-ல் பதிவிறக்கம் செய்ய…. இணைப்பு

Torrent-ல் பதிவிறக்கம் செய்வது எப்படி?

தெரிய இங்கே சொடுக்கவும்

குறிப்பு: முதல் பதிவு என்பதால், சரியாக விவரிக்க இயலவில்லை. பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், பின்னூட்டத்தில் தெரிய படுத்தவும்.

அறிமுகம்: கவின் சினிமா

Posted by மு.இரா Thursday, September 3, 2009 1 comments

கவின் சினிமா... என்றால் அழகான திரைப்படங்கள் என்று பொருள்படும். எனக்கு தெரிந்த வரையில், நான் பார்த்த வரையில் அழகான படங்களை உங்களுக்கு காட்ட போகிறேன்.

இதற்க்கு நான் ஒன்றும் சினிமா சம்பந்தபட்டவனும் அல்ல... திறமையாணவனும் அல்ல... சின்னதாக இருந்தாலும், சிறப்பாக செய்ய ஆசைபடும் சாதாரண வலைபூ பதிவாளன்.

நான் சொல்ல நினைத்த கருத்துக்களை, நான் காட்ட போகும் படங்கள் நிச்சயம் உங்களுக்கு காட்டும்.

இப்படிக்கு,

மு.இரா.